< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
காரில் கடத்த முயன்ற 500 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
|20 Oct 2023 1:00 AM IST
காவேரிப்பட்டணம் அருகே காரில் கடத்த முயன்ற 500 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி ரமணன் மற்றும் போலீசார் நேற்று திம்மாபுரம் அருகே பெங்களூரு- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் 500 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து காரை ஓட்டி வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மனோகர் சிங் (வயது 26), மதன்சிங் (19) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்ததில் புகையிலை பொருட்கள் பெங்களூருவில் இருந்து விற்பனைக்காக சேலத்திற்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து காருடன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.