< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நீதித்துறை மீதான நம்பிக்கை இப்போது வலுவடைந்துள்ளது - குஷ்பூ
|21 Dec 2023 3:49 PM IST
ஊழலுக்கு சகிப்புத்தன்மை இருக்கக்கூடாது. வேரிலிருந்து ஒழிக்கப்பட வேண்டும் என குஷ்பூ தெரிவித்துள்ளார்
சென்னை,
சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பது குறித்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
ஊழலுக்கு சகிப்புத்தன்மை இருக்கக்கூடாது. வேரிலிருந்து ஒழிக்கப்பட வேண்டும். திமுக ஊழல் மற்றும் கொள்ளையின் உருவகமாகும், மேலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டிய நேரம் இது. திமுக அமைச்சர் பொன்முடிக்கு வழங்கிய தீர்ப்பை முழுமனதுடன் வரவேற்கிறேன். நமது நீதித்துறையின் மீதான எனது நம்பிக்கை இப்போது வலுவடைந்துள்ளது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.