< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மீனவர்கள் கைதை கண்டித்து மாநாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்
|25 July 2023 12:18 PM IST
மீனவர்கள் கைதை கண்டித்து அடுத்த மாதம் 18ந் தேதி ராமநாதபுரத்தில் நடக்கும் மீனவர் சங்க மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
சென்னை,
தமிழக மீனவர்கள் 9 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் மீனவர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் தமிழக மீனவர்கள் கைதை கண்டித்து அடுத்த மாதம் 18ந் தேதி ராமநாதபுரத்தில் மீனவர் சங்க மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மீனவர் சங்க பிரதிநிதிகளின் அழைப்பை ஏற்று ஆகஸ்ட் 18ல் நடக்கும் மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.