< Back
மாநில செய்திகள்
அடிப்படை வசதிகள் செய்யாததை கண்டித்துசின்னமனூர் கூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு:தர்ணாவிலும் ஈடுபட்டதால் பரபரப்பு
தேனி
மாநில செய்திகள்

அடிப்படை வசதிகள் செய்யாததை கண்டித்துசின்னமனூர் கூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு:தர்ணாவிலும் ஈடுபட்டதால் பரபரப்பு

தினத்தந்தி
|
29 April 2023 12:15 AM IST

அடிப்படை வசதிகள் செய்யாததை கண்டித்து சின்னமனூர் நகராட்சி கூட்டத்தில் இருந்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சின்னமனூரில் நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு தலைவர் அய்யம்மாள் ராமு தலைமை தாங்கினார். கூட்டம் தொடங்கியதும் திடீரென கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் அவர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு அமர்நது தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது எங்கள் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுவதில்லை. தெரு விளக்குகள் சரியாக எரிவதில்லை. இதனால் அடிப்படை வசதிகளை முறையாக செய்து தரக்கோரி நகராட்சி தலைவரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து தர்ணாவில் ஈடுபட்டோம் என்று கவுன்சிலர்கள் கூறினர்.

மேலும் எள்ளு கடை தெருவில் இருந்த டாஸ்மாக் கடை பெரும் போராட்டத்திற்கு அகற்றப்பட்டது. ஆனால் தற்போது அந்த இடத்தில் தனிநபர்கள் மனமகிழ் மன்றம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது அவர்கள் சரியான பதிலளிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினர். சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தானாக கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் நகராட்சி கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்