< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்
மின்சார சட்ட திருத்த மசோதாவை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்
|9 Aug 2022 3:32 AM IST
மின்சார சட்ட திருத்த மசோதாவை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பாராளுமன்றத்தில் மின்சார சட்ட திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் கழகம் சார்பில் ஈரோடு மின்வாரிய அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் கழக மாநில செயலாளர் இந்திராணி தலைமை தாங்கினார். மின்வாரிய ஊழியர்கள் கூட்டமைப்பு மண்டல செயலாளர் ஜோதிமணி முன்னிலை வகித்தார். இதில் மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.