< Back
மாநில செய்திகள்
கட்டணம் உயர்த்தியதை கண்டித்து கப்பலூர், எலியார்பத்தி சுங்கச்சாவடியை அகற்றக்கோரி தே.மு.தி.க. போராட்டம்
மதுரை
மாநில செய்திகள்

கட்டணம் உயர்த்தியதை கண்டித்து கப்பலூர், எலியார்பத்தி சுங்கச்சாவடியை அகற்றக்கோரி தே.மு.தி.க. போராட்டம்

தினத்தந்தி
|
9 Sep 2023 8:55 PM GMT

கட்டணம் உயர்த்தியதை கண்டித்து கப்பலூர், எலியார்பத்தி சுங்கச்சாவடியை அகற்றக்கோரி தே.மு.தி.க. சார்பில் போராட்டம் நடந்தது.


கட்டணம் உயர்த்தியதை கண்டித்து கப்பலூர், எலியார்பத்தி சுங்கச்சாவடியை அகற்றக்கோரி தே.மு.தி.க. சார்பில் போராட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம்

சுங்கச்சாவடியில் தொடர்ந்து கட்டணத்தை உயர்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து நேற்று மதுரையில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை தெற்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் கணபதி தலைமை தாங்கினார். தேர்தல் பணி குழுச்செயலாளர் அழகர்சாமி முன்னிலை வகித்தார். மத்திய அரசு சுங்கச்சாவடிகளை எண்ணிக்கையை குறைக்க வேண்டும், சுங்கச்சாவடி கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோஷம் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவை தலைவர் தனபாண்டி, பொருளாளர் ரவிச்சந்திரன், துணைச் செயலாளர் செல்வம், ஒன்றிய செயலாளர்கள் கார்த்திகேயன், பாண்டியன், நகரச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிட்டம்பட்டி

மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன் தலைமையில் மத்திய அரசு சுங்க வரி கட்டணம் உயர்த்தியதை கண்டித்து மேலூர் அருகே உள்ள சிட்டம்பட்டி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு தே.மு.தி.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிகழ்ச்சியில் மதுரை வடக்கு, கிழக்கு, மேற்கு தொகுதி நிர்வாகிகள் மற்றும் மேலூர் நகர் கழக செயலாளர் சரவணன், மேலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் விட்டி கண்ணன், மேற்கு ஒன்றிய செயலாளர் காளீஸ்வரன், கொட்டாம்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பட்டூர் சந்தனப்பீர் ஒலியுல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோஷம்

சுங்கச்சாவடியில் தொடர்ந்து கட்டணத்தை உயர்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து மதுரை தே.மு.தி.க. மாநகர தெற்கு மாவட்டம் சார்பாக மதுரை எலியார்பத்தி பகுதியில் உள்ள சுங்கச்சாவடியை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, மாநகர் தெற்கு மாவட்ட செயலாளர் முத்துப்பட்டி மணிகண்டன், உயர் மட்ட குழு உறுப்பினர் பாலன் தலைமையில் அக்கட்சியை சேர்ந்தவர்கள் அங்கு வந்தனர்.

பின்னர் அவர்கள், மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சியில், தே.மு.தி.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்