< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
விஜயகரிசல்குளம் அகழாய்வில் கிடைத்த சங்கு வளையல்கள்
|6 July 2023 2:02 AM IST
விஜயகரிசல்குளம் அகழாய்வில் சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டன.
தாயில்பட்டி,
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா விஜயகரிசல்குளத்தில் 2-ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. இங்கு 11-வது அகழாய்வு குழி தோண்டப்பட்டது அதில் சேதமடைந்த சங்கு வளையல்கள் கிடைத்துள்ளன. மேலும் மண்சட்டிகள், குடிநீர் பானையை மூடுவதற்கு பயன்படுத்தப்பட்ட மூடியின் கைப்பிடியும் சேதம் அடைந்த நிலையில் கிடைத்துள்ளது.
கைப்பிடி நன்கு தடிமன் உள்ள வகையில் தயார் செய்துள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.
முதலாம் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்கள் பொதுமக்கள் பார்வையிட வசதியாக அங்கு கண்காட்சியாக அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 3,500 பேர் கண்காட்சியை பார்வையிட்டுள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.