< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கிறிஸ்தவர்களாக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் சலுகை - சட்டப்பேரவையில் இன்று முதல்-அமைச்சர் தனி தீர்மானம்
|19 April 2023 7:34 AM IST
கிறிஸ்தவர்களாக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் சலுகைகள் வழங்க மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தனி தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முன் மொழிகிறார்.
சென்னை,
கிறிஸ்தவர்களாக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் அரசினர் தனி தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முன் மொழிகிறார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட ரீதியான பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் விரிவுபடுத்தி அவர்களும் அனைத்து வகையிலும் சமூக நீதியின் பயன்களை பெற அரசியலமைப்பு சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் அரசினர் தனி தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முன் மொழிகிறார்.