< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
2 பெண்களை திருமணம் செய்ததை மறைத்து இளம்பெண்ணுடன் காதல் - 13 சவரன் நகைகளை அபேஸ் செய்த நபர் கைது
|10 March 2024 6:07 PM IST
ஏற்கனவே அவருக்கு 2 திருமணங்கள் ஆன விவரத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்த இளம்பெண், போலீசில் புகார் அளித்துள்ளார்.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரியில், 2 பெண்களை திருமணம் செய்ததை மறைத்து, இளம்பெண்ணை காதலிப்பதாகக் கூறி, 13 சவரன் நகைகளை பெற்று தலைமறைவான நபரை போலீசார் கைது செய்தனர்.
இரணியல் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், மினி பேருந்தில் அடிக்கடி பயணம் செய்தபோது, அதில் நடத்துனராக இருந்த ராஜூ என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இந்தப் பழக்கம் காதலாக மாறவே, அதனைப் பயன்படுத்திக் கொண்ட ராஜூ, நைசாக பேசி, பெண்ணிடம் இருந்து 13 சவரன் நகைகளை வாங்கி உள்ளார்.
பின்னர், ராஜூவுக்கு ஏற்கனவே 2 திருமணங்கள் ஆன விவரத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்த பெண், இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.