< Back
மாநில செய்திகள்
உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு
மாநில செய்திகள்

உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு

தினத்தந்தி
|
17 Jan 2023 5:30 PM IST

முதல்-இடம் பிடித்த அபி சித்தருக்கு முதல்-அமைச்சர் சார்பில் கார் பரிசாக வழங்கப்படுகிறது.

மதுரை,

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது. போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியைசைத்து தொடங்கி வைத்தார்.

மொத்தம் 10 சுற்றுகளில் 823 மாடுகள் களமிறங்கின. இதில் 26 காளைகளை அடக்கிய வீரர் அபி சித்தர் முதல் இடத்தைப் பிடித்தார். ஏனாதி அஜய் 20 காளைகளை அடக்கி 2-வது இடத்தைப் பிடித்தார். அலங்காநல்லூர் ரஞ்சித் 12 காளைகளை அடக்கி 3-வது இடத்தைப் பிடித்தார்.

இன்றைய போட்டியில் முதல்-இடம் பிடித்த அபி சித்தருக்கு முதல்-அமைச்சர் சார்பில் கார் பரிசாக வழங்கப்படுகிறது. மேலும் வெற்றி பெற்ற காளைகளுக்கும், வீரர்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள், சில்வர் பாத்திரங்கள், சைக்கிள், கட்டில், பீரோ, மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட ஏராளமான பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன.

மேலும் செய்திகள்