< Back
மாநில செய்திகள்
தனி மாவட்டமாக உதயமாகி 30 ஆண்டுகள் நிறைவு:கடலூர் 30 லோகோ வடிவமைப்பு போட்டிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
கடலூர்
மாநில செய்திகள்

தனி மாவட்டமாக உதயமாகி 30 ஆண்டுகள் நிறைவு:கடலூர் 30 லோகோ வடிவமைப்பு போட்டிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

தினத்தந்தி
|
22 Sept 2023 12:15 AM IST

கடலூர் 30 லோகோ வடிவமைப்பு போட்டிக்கு last day விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.

ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து கடலூர் மாவட்டம் பிரிந்து தனி மாவட்டமாக உருவானது. அவ்வாறு உதயமாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி "கடலூர் 30" என்ற தலைப்பில் நெய்தல் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.

அதேபோல் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அரசு பல்துறை பொருட்காட்சி, சொற்பொழிவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 'லோகோ வடிவமைப்பு போட்டி' நடத்தப்பட உள்ளது.

இந்த போட்டியில் பொதுமக்கள் பங்குபெறலாம். மேற்படி போட்டியில் பங்குகொண்டு தேர்ந்தெடுக்கப்படும் வெற்றியாளருக்கு பரிசுத்தொகை வழங்கப்படும்.

போட்டியாளர்கள் தாங்கள் உருவாக்கும் லோகோ வடிவத்தை cuddalore.muppathu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இன்றைக்குள் (வெள்ளிக்கிழமை) அனுப்பி வைக்க வேண்டும். இதில் சிறந்த லோகோ தேர்வு செய்யப்படும்.

மேற்கண்ட தகவல் கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்