புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம்: கடலூர், விழுப்புரத்தில் இருந்து பஸ் சேவை நிறுத்தம்
|புதுச்சேரி வழியாக சென்னை செல்லும் பஸ்கள் விழுப்புரம் மார்க்கத்தில் திருப்பி விடப்பட்டுள்ளன.
கடலூர்,
புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டதை கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தால் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. தமிழக அரசு பஸ்களும் எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. டெம்போ, ஆட்டோ போன்ற போக்குவரத்து இயங்கவில்லை. திரையரங்குகளிலும் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
புதுச்சேரி முழு அடைப்பு போராட்டம் எதிரொலியாக கடலூர், விழுப்புரத்தில் இருந்து பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. கடலூரில் இருந்து புதுச்சேரி செல்லும் அரசு, தனியார் பஸ்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன. புதுச்சேரி வழியாக சென்னை செல்லும் பஸ்கள் விழுப்புரம் மார்க்கத்தில் திருப்பி விடப்பட்டுள்ளன.
விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் அரசு, தனியார் பஸ்களும் இயக்கப்படவில்லை. பஸ் சேவை நிறுத்தப்பட்டதால் பஸ் நிலையங்களில் பயணிகள் நீண்ட நேரமாக காத்திருக்கின்றனர்.