கடலூர்
பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்
|பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கலெக்டரிடம், நாம் தமிழர் கட்சியினர் மனு அளித்தனர்.
கடலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சுமதி சீனிவாசன், மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோலன் தலைமையில் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சாமிரவி, நாடாளுமன்ற பொறுப்பாளர் தமிழ், சிதம்பரம் செல்வம் ஆகியோர் முன்னிலையில் கலெக்டர் அருண் தம்புராஜிடம் கோாிக்கை மனு ஒன்றை வழங்கினர். அந்த மனுவில், தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். மது விற்பனையை அரசே முன்னெடுத்து நடத்தி வருவதால், பல்வேறு வகையான குற்றங்களுக்கு உடந்தையாகவும் முக்கிய காரணியாகவும் உள்ளது. கடந்த 2018 முதல் 2022-ம் ஆண்டு வரை குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் 1,108 சாலை விபத்துகள் நடந்துள்ளன. அவற்றில் 262 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை ஏற்பட்ட டாஸ்மாக் சீரழிவுகளுக்கு அரசு பொறுப்பேற்று முழுமையான மதுவிலக்கினை உடனடியாக அமல்படுத்த முன்வர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
அப்போது மாவட்ட பொருளாளர் முனியப்பன், நெல்லிக்குப்பம் நகர செயலாளர் சிவச்சந்திரன், தொகுதி பொறுப்பாளர்கள் பண்ருட்டி வெற்றிவேலன், கண்மணி, தாஸ், ராமச்சந்திரன், சுந்தரபாண்டி, செந்தில்குமார், சாந்தகுமார், விவேகானந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.