திருவாரூர்
உணவு பொருட்கள் கடத்தல்- பதுக்கல் குறித்து புகார் தெரிவிக்கலாம்
|உணவு பொருட்கள் கடத்தல்- பதுக்கல் குறித்து புகார் தெரிவிக்கலாம்
திருவாரூர் உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு போலீசார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு ஏழை- எளிய நடுத்தர குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் பொதுவினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்து வருகிறது. இதனை சிலர் முறைகேடாக கடத்தி கள்ள சந்தையில் விற்று அதிக லாபம் பெறும் நோக்கில் செயல்படுகின்றனர். உணவு பொருட்கள் கடத்துபவர்கள் பற்றியும், அதனை பதுக்கி வைப்பவர்கள் பற்றியும் பொதுமக்கள் 18005995950 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிப்பவர்கள் குறித்து ரகசியம் காக்கப்படும். இதற்காக மாநில உணவு கடத்தல் தடுப்பு குற்ற பிரிவு போலீசில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறை போலீசாரின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. எனவே பொதுமக்கள் தங்கள் பகுதியில் உணவு பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கிவைப்பது குறித்து தெரியவந்தால் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.