< Back
மாநில செய்திகள்
கொத்தடிமை, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து புகார் தெரிவிக்கலாம்
விழுப்புரம்
மாநில செய்திகள்

கொத்தடிமை, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து புகார் தெரிவிக்கலாம்

தினத்தந்தி
|
10 March 2023 12:15 AM IST

கொத்தடிமை, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து புகார் தெரிவிக்கலாம் விழுப்புரம் கலெக்டர் தகவல்

விழுப்புரம்

தமிழ்நாடு முழுவதும் கொத்தடிமை தொழிலாளர் மற்றும் குழந்தை தொழிலாளர் குறித்த புகார்களை தெரிவிக்க இலவச தொலைபேசி அழைப்பு எண் 1800 4252 650 உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது எளிதில் நினைவில் வைத்துக்கொள்ளும் பொருட்டு பி.எஸ்.என்.எல். மூலம் 155214 என்ற எண் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.

எனவே விழுப்புரம் மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் மற்றும் குழந்தை தொழிலாளர் குறித்து புகார் தெரிவிக்க மேற்கண்ட கட்டணமில்லாத தொலைபேசி எண்ணை பொதுமக்கள் பயன்படுத்தி புகார் தெரிவிக்கலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்