< Back
மாநில செய்திகள்
கந்து வட்டி வசூல் செய்பவர்கள் மீது புகார் தெரிவிக்கலாம்-போலீஸ் சூப்பிரண்டு தகவல்
அரியலூர்
மாநில செய்திகள்

கந்து வட்டி வசூல் செய்பவர்கள் மீது புகார் தெரிவிக்கலாம்-போலீஸ் சூப்பிரண்டு தகவல்

தினத்தந்தி
|
30 Jan 2023 12:05 AM IST

அரியலூர் மாவட்டத்தில் கந்து வட்டி வசூல் செய்பவர்கள் மீது புகார் தெரிவிக்கலாம் என போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

அரியலூர் மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி வட்டி தொழில் செய்வது சட்ட விரோதமானது. மேற்படி அனுமதியில்லாத வட்டி தொழில் மூலம் கந்து வட்டி, மீட்டர் வட்டி, தினசரி வட்டி, மணிக்கு மணி வட்டி என வட்டி வசூல் செய்து பொதுமக்களுக்கு துன்பம் விளைவிப்பவர்கள் மீது தமிழ்நாடு கந்து வட்டி தடை சட்டம் 2003-ன் படி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் அரசு அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக கந்து வட்டி வசூல் செய்பவர்கள் மீது உரிய புகாரினை போலீசாருக்கு தெரிவித்து மேற்படி கொடுமையில் இருந்து தங்களை மீட்டு கொள்ளலாம். மேற்படி புகார் தொடர்பாக அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அருகே உள்ள போலீஸ் நிலையங்களில் தெரிவிக்க வேண்டும், என்று அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்