< Back
மாநில செய்திகள்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்
சாராயம், வெளி மாநில மதுபானங்கள் விற்பவர்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம்
|13 Jun 2023 11:36 PM IST
சாராயம், வெளி மாநில மதுபானங்கள் விற்பவர்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் சாராயம், அரசு மதுபானங்கள், வெளிமாநில மதுவகைகள் கள்ளத்தனமாக விற்கப்படுவது தெரியவந்தாலும், போதைப் பொருட்கள் பயன்படுத்துவது தெரியவந்தாலும் ராணிப்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு 90427 42564 எனற தொலைபேசியில் தகவல் தெரிவிக்கலாம்.
அதேபோன்று அரக்கோணம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு 90427 29352, காவல் உதவி எண்-10581 (கட்டணமில்லா தொடர்பு எண்) ஆகியவற்றிலும் தகவல் தெரிவிக்கலாம். அவர்களின் விவரம் ரகசியமாக வைக்கப்படும்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் வளர்மதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.