< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஆட்டுக்கறியுடன் மாடுக்கறி கலந்து விற்பதாக புகார் - ஈரோட்டில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை
|11 Sept 2022 4:02 PM IST
கிருஷ்ணம்பாளையம் சுற்றுவட்டாரங்களில் உள்ள இறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஈரோடு,
ஈரோட்டில் ஆட்டுக்கறியுடன் மாட்டுக்கறியையும் கலந்து விற்பதாக எழுந்த புகாரையடுத்து, இறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று இறைச்சி கடைகளில் அசைவ பிரியர்கள் குவிந்த நிலையில், ஆட்டுக்கறியுடன் மாட்டுக்கறியை சேர்த்து விற்பதாக புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து கிருஷ்ணம்பாளையம் சுற்றுவட்டாரங்களில் உள்ள இறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல் செய்ததுடன் அவற்றை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர். தரமற்ற இறைச்சியை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என இறைச்சிக் கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.