< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு
|24 Aug 2023 12:15 AM IST
போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி சார்பில் வடக்கு நகர் அமைப்பாளர் மருதுபாண்டி தலைமையில் நிர்வாகிகள் நேற்று காலை ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாநாட்டில் கனிமொழி எம்.பி.யை ஆபாசமாக அவதூறாக பாட்டு பாடி அநாகரிகமான முறையில் பேசி உள்ளனர். இது தி.மு.க. தொண்டர்கள் மட்டுமல்லாது பொதுமக்களையும் மனவேதனை அடைய செய்துள்ளது. இந்த அநாகரிகமான செயலை அ.தி.மு.க. தலைவர்கள், கட்சியினர் ரசித்து ஊக்கப்படுத்தி உள்ளது கண்டனத்திற்குரியது. எனவே, இதற்கு காரணமானவர்கள் மீது கடும் சட்டபிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.