< Back
மாநில செய்திகள்
அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார்
மாநில செய்திகள்

அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார்

தினத்தந்தி
|
27 Aug 2024 5:27 PM IST

எடப்பாடி பழனிசாமியை அவமானப்படுத்தும் வகையிலும் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் அண்ணாமலை தொடர்ந்து பேசிவருவதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை,

தமிழக பா.ஜனதா சார்பில் சென்னையில் 'தமிழகம் மீட்போம், தளராது உழைப்போம்' என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் கடந்த 25-ந் தேதி நடைபெற்றது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனை அ.தி.மு.க.வினர் பலரும் வன்மையாக கண்டித்து வருகின்றனர். இந்நிலையில், அ.தி.மு.க. மருத்துவ அணியின் மாநில செயலாளர் டாக்டர் சரவணன் மதுரை மாநகர போலீஸ் கமிஷனரிடம் அண்ணாமலைக்கு எதிராக புகார் ஒன்றை அளித்தார்.

அதில், கடந்த 25-ந் தேதி சென்னையில் நடைபெற்ற பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை களங்கப்படுத்தும் நோக்கில் பேசி உள்ளார். எடப்பாடி பழனிசாமியை அவமானப்படுத்தும் நோக்கிலும், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் அண்ணாமலை தொடர்ந்து பேசி வருகிறார். ஆகவே, அ.தி.மு.க. குறித்தும், எடப்பாடி பழனிசாமி மீதும் அவதூறு பரப்பி வரும் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்