< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
ஆலமரத்தை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்
|7 Oct 2023 11:07 PM IST
ஆலமரத்தை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நிண்ணியூர் பெரிய ஏரியின் வடிகால் வாய்க்காலில் பெரிய ஆலமரம் ஒன்று இருந்தது. இந்த மரம் அப்பகுதியில் ஆடு, மாடு மேய்ப்பவர்களும், வழிப்போக்கர்களும் இளைப்பாறும் இடமாக இருந்து வந்தது. இந்த நிலையில் இந்த ஆலமரத்தை அப்பகுதியில் உள்ள சிலர் பொக்லைன் எந்திரங்கள் மூலம் வேருடன் வெட்டி அப்புறப்படுத்திவிட்டனர். இதனைக் கண்டு அதிர்ச்சி நிண்ணியூர் மேலத்தெரு ஊராட்சி உறுப்பினர் கவிவண்ணியா, பார்வதி மற்றும் பொதுமக்கள் செந்துறை தாசில்தாரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் பொதுமக்களை வெயிலில் இருந்து காப்பாற்றி வந்த ஆலமரத்தை வெட்டியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.