< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
நீர் ஆதார பாதுகாப்பு குழுவினர் அஞ்சலட்டை மூலமாக புகார்
|24 March 2023 11:29 PM IST
மங்களமேடு அடுத்துள்ள லெப்பைக்குடிகாடு நீர் ஆதார பாதுகாப்பு குழுவினர் அஞ்சலட்டை மூலமாக புகார்
பெரம்பலூர் மாவட்டம் பெண்ணக்கோணம் வடக்கு வருவாய் கிராம எல்லையில் லெப்பைக்குடிகாடு நீர் ஆதார பாதுகாப்பு குழுவினர் நேற்று மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு 120 அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு நீர் ஆதார பாதுகாப்புக்குழு தலைவர் அலிராஜா தலைமை தாங்கினார். தொடர்ந்து அவர்கள் 120 அஞ்சல் அட்டையை லெப்பைக்குடிகாடு அஞ்சல் அலுவலகத்தின் மூலம் மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு அனுப்பினர். அதில் தமிழக அரசால் செயல்படுத்த முனையும் வேப்பூர் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு தேர்வு செய்த இடமானது முற்றிலும் நீர் ஆதாரமற்றது ஆகும். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.