< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக புகார் - மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் வாக்குவாதம்
|28 Jan 2024 5:41 PM IST
காய்ச்சல் மற்றும் காது வலி காரணமாக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு,
ஈரோட்டில் தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக கூறி தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியைச் சேர்ந்தவர் வளர்மதி. காய்ச்சல் மற்றும் காது வலி காரணமாக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் வளர்மதியின் கழுத்தில் துளையிட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படும் சூழலில், அவர் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து தவறான சிகிச்சை காரணமாகவே அவர் உயிரிழந்ததாக கூறி வளர்மதியின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு மருத்துவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்று பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், வளர்மதியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.