< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பங்குச்சந்தை முறைகேடு புகார்: சென்னையில் காங்கிரஸ் இன்று ஆர்ப்பாட்டம்
|22 Aug 2024 7:48 AM IST
சென்னை நுங்கம்பாக்கத்தில் செல்வப்பெருந்தகை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
சென்னை,
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; அதானியின் பங்குச் சந்தை மோசடியில் சம்பந்தப்பட்டுள்ள செபியின் தலைவர் உடனடியாக பதவியிலிருந்து நீக்கப்பட்டு இதுகுறித்து கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரிக்க வேண்டும், சாதி வாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய காங்கிரஸ் நாடு முழுவதும் அனைத்து மாநில தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
அதன்படி தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக இன்று மாலை 3 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கம், சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் எதிரே எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் பெருமளவில் பங்கேற்க வேண்டும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.