திருவள்ளூர்
மனைவியை அடித்து துன்புறுத்தியதாக புகார்: வரதட்சணை கொடுமை வழக்கில் கணவர் கைது - தாய், தங்கை உள்பட 4 பேருக்கு வலைவீச்சு
|திருத்தணி அருகே வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய வழக்கில் கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பொதட்டூர்பேட்டை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்து (வயது 22). இவரது மனைவி பர்வீன் (வயது 22). வெவ்வேறு மதத்தை சேர்ந்த இவர்கள் இருவரும் காதலித்து கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில் கணவர் முத்து மற்றும் அவரின் தாய் காஞ்சனா, அண்ணன் பாபு, தங்கை அபிலா, சித்தி சரோஜா ஆகியோர் வரதட்சணை கேட்டு பர்வினாவை அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பர்வீனா திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணவர் முத்து மற்றும் அவரது குடும்பத்தினர் 4 பேர் மீது வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் கீர்த்திகா முத்துவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். மேலும் 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.