< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள்; பா.ஜ.க.வினர் மனு
|29 March 2023 2:15 AM IST
அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் என பா.ஜ.க.வினர் மனு கொடுத்தனர்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் தனபாலன், ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாவட்ட துணைத்தலைவர் ராஜாராம் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று திண்டுக்கல்லில் உள்ள இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் அணைப்பட்டியில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு தினமும் அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். எனவே அங்கு பக்தர்களின் வசதிக்காக சுகாதார வளாகம், பெண்கள் உடை மாற்றும் அறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஊராட்சி நிர்வாகம் மேற்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும், என்று கூறப்பட்டு உள்ளது.