< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
திம்மரசநாயக்கனூரில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி மீண்டும் மனு
|11 Feb 2023 2:00 AM IST
திம்மரசநாயக்கனூரில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி கிராம மக்கள் மீண்டும் மனு கொடுத்தனர்.
ஆண்டிப்பட்டி அருகே திம்மரசநாயக்கனூரை சேர்ந்த கிராம மக்கள் சிலர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அப்போது அவர்கள், கலெக்டர் ஷஜீவனாவிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், "எங்கள் ஊரில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டு நடத்தி வந்தோம்.
பின்னர் ஜல்லிக்கட்டு தொடர்பான கோர்ட்டு வழக்குகள் நடந்து வந்த காலங்களில் ஜல்லிக்கட்டு நடத்தவில்லை. பாரம்பரிய வழக்கப்படி மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்ய உள்ளோம். எனவே எங்கள் கிராமத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
திம்மரசநாயக்கனூர் கிராம மக்கள் கடந்த மாதம் இதே கோரிக்கை தொடர்பாக கலெக்டரிடம் மனு அளித்தனர். தற்போது மீண்டும் கலெக்டரிடம் அவர்கள் மனு கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.