< Back
மாநில செய்திகள்
புகார் பெட்டி
சிவகங்கை
மாநில செய்திகள்

புகார் பெட்டி

தினத்தந்தி
|
14 Jun 2023 7:17 PM GMT

புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-


சேதமடைந்த சாலை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் உள்ள ஒரு சில கிராமங்களுக்கு செல்லும் சாலை ஆங்காங்கே சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலையை பயன்படுத்துவோர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், மானாமதுரை, சிவகங்கை.

தெருநாய்கள் தொல்லை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் உள்ள நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சந்தோஷ், திருப்பத்தூர், சிவகங்கை.

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் இருந்து அதன் சுற்றுவட்டார கிராமங்களுக்கு செல்ல போதிய அளவு பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முருகேசன், காளையார்கோவில், சிவகங்கை.

சாலை அகலப்படுத்தப்படுமா?

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து கோட்டை கிருஷ்ணாபுரம் வழியாக எஸ்.எஸ்.கோட்டைக்கு செல்லும் இருவழிச் சாலை குறுகலாக இருப்பதால் வாகனங்கள் ஒன்றைஒன்று முந்தி செல்லும் போது விபத்துக்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே இந்த சாலையை அகலப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுந்தர்ராஜ், திருப்பத்தூர், சிவகங்கை.

பொதுமக்கள் சிரமம்

சிவகங்கை மாவட்டம் உறுதிகோட்டை ஊராட்சி திட்டுக்கோட்டை பகுதியில் குறைந்த மின்னழுத்த பிரச்சினை உள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்களும் அடிக்கடி பழுதாகின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், உறுதிக்கோட்டை, சிவகங்கை

மேலும் செய்திகள்