< Back
மாநில செய்திகள்
புகார்பெட்டி
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

புகார்பெட்டி

தினத்தந்தி
|
1 Jun 2023 12:15 AM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டணம் பஸ் நிலையத்தில் சிலர் தங்கள் வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்கின்றனர். இதனால் பயணிகளுக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சீனி ஜலாலுதீன், பெரியபட்டணம்.

குடிநீர் தட்டுப்பாடு

ராமநாதபுரம் மாவட்டம் திருவொற்றியூர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள், திருவொற்றியூர்.

சீரான மின்வினியோகம் வேண்டும்

ராமநாதபுரம் ரோஸ் நகரில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதனால் வீட்டடில் உள்ள மின்சாதன பொருட்களும் அடிக்கடி பழுதாகின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரமேஷ், ராமநாதபுரம்.

நோய் பரவும் அபாயம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொசுக்கடியால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் கொசுக்களினால் டெங்கு உள்ளிட்ட நோய்களும் பரவ வாய்ப்புள்ளது. எனவே இந்த பகுதிகளில் கொசுக்களை ஒழிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

வசந்த், பரமக்குடி.

நடவடிக்கை தேவை

ராமநாதபுரம் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிலர் விதிகளை மீறி அதிக ஒலிஎழுப்பும் ஒலிப்பான்களை பயன்படுத்துகின்றனர். இதனால் மற்ற வாகன ஓட்டிகள் பதற்றமடைவதுடன் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கார்த்திக், ராமநாதபுரம்.

மேலும் செய்திகள்