< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
சிவகங்கை
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி
|
14 May 2023 6:45 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சாலையில் சுற்றி திரியும் கால்நடைகள்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் சுற்று வட்டார பகுதி சாலைகளில் கால்நடைகள் அதிகம் சுற்றித்திரிகின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விபத்து அபாயம்

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சாலைகள் சில இடங்களில் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவ்வப்போது விபத்தில் சிக்குகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள் அவதி

சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதியில் இருந்து அதன் சுற்றுவட்டார பகுதி கிராமங்களுக்கு செல்ல போதிய பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அச்சுறுத்தும் நாய்கள்

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தெரு நாய்கள் பொதுமக்களை அச்சுறுத்துவதுடன் வாகனங்களின் குறுக்கே பாய்ந்து விபத்துக்களையும் ஏற்படுத்துகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடவடிக்கை தேவை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கண்மாய்களில் கருவேல மரங்களும் முட்புதர்களும் வளர்ந்துள்ளன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதுடன் விவசாயிகளும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்