கன்னியாகுமரி
புகார் பெட்டி
|புகார் பெட்டி
மரம் வெட்டி அகற்றப்பட்டது
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட கோர்ட்டு ரோட்டில் இருந்து டதி பெண்கள் பள்ளி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்தும் பகுதியில் மிக பழமையான பட்டப்போன மரம் ஒன்று நின்றது. எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாய நிலையில் காணப்பட்டது. இதுபற்றி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பட்டுப்போன மரத்தை வெட்டி அகற்றினர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
-நாஞ்சில் விஷ்ணு, சந்தைவிளை.
சேதமடைந்த மின்கம்பம்
திங்கள்சந்தை அருகே உள்ள பட்டரிவிளை அரசு பள்ளிக்கு செல்லும் சாலையோரத்தில் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பத்தின் அடிப்பகுதி ேசதமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்வோர் விபத்து சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெஸ்பின், சிராயன்குழி.
தூர்வார வேண்டும்
புத்தேரியில் உள்ள பூச்சான்குளம் மற்றும் புத்தேரி பெரியகுளம் தூர்வாரப்பாடாமல் உள்ளது. இதனால், செடிகள், ஆகாய தாமரைகள் வளர்ந்தும், கழிவுகள் கொட்டப்பட்டும் காணப்படுகிறது. இதன்காரணமாக அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே, குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஹரிணி ஜெயா, இறச்சகுளம்.
தொற்றுநோய் பரவும் அபாயம்
நாகர்கோவில் கோட்டார் முதலியார்விளை மாசானமுத்து கோவிலின் முன்புறம் உள்ள தெருவில் சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வே.கார்த்திக், கோட்டார்.
சாலை சீரமைக்கப்படுமா?
குளச்சல் நகராட்சிக்குட்பட்ட காமராஜர் சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகுகிறார்கள். மேலும், அவர்கள் அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அபுதாய்ரு, குளச்சல்.
கழிவுகளை அகற்ற வேண்டும்
கன்னியாகுமரி-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் அச்சங்குளத்தில் இருந்து பொற்றையடி வரை சாலையின் இடதுபுறம் இளநீர் மற்றும் நுங்கு வியாபாரிகள் கழிவுகளை கொண்டியுள்ளனர். இவை பல இடங்களில் குவிந்து கிடக்கின்றன. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பகுதி மாசடைவதோடு விஷப்பாம்புகள் வசிப்பிடமாக மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுகளை அகற்றுவதுடன், உடனுக்குடன் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ், சந்தையடி.
ஆபத்தான பள்ளம்
குளச்சல் நகராட்சிக்குட்பட்ட ஆசாரி தெரு உள்ளது. இந்த தெருவில் குடிநீர் குழாய்க்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால், பணிகள் நிறைவடைந்ததும் அந்த பள்ளத்தை முறையாக சீரமைக்காமல் விட்டுவிட்டனர். இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கி வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.முகம்மது சபீர், குளச்சல்.