< Back
மாநில செய்திகள்
புகார் பெட்டி
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

புகார் பெட்டி

தினத்தந்தி
|
19 April 2023 6:45 PM GMT

புகார் பெட்டி

நடவடிக்கை தேவை

சரக்கல்விளை வீட்டுவசதி குடியிருப்பு பகுதியில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள குழந்தைகள் மாலை நேரங்களில் இந்த பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் மூலம் விளையாடி வந்தனர். தற்போது இந்த பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் குழந்தைகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, குழந்தைகள் நலன் கருதி விளையாட்டு உபகரணங்களை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜகண்ணன், சரக்கல்விளை.

சாலை சீரமைக்கப்படுமா?

நாகர்கோவில் மாநகராட்சி 45-வது வார்டுக்கு உட்பட்ட தாராவிளையில் இருந்து பூவன்குடியிருப்புக்கு செல்லும் இணைப்பு சாலை உள்ளது.

இந்த சாலையில் 12 தெருவிளக்குள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த சாலையில் செடிகள் வளர்ந்து புதராக காணப்படுகிறது. தெருவிளக்குகளும் எப்போதும் எரிந்த நிலையிலேயே உள்ளன. எனவே, செடிகளைஅகற்றி சாலையை சீரமைத்து தார் சாலையாக மாற்றி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.சுரேஷ், பூவன்குடியிருப்பு.

பாதசாரிகள் அவதி

மேலபுத்தேரியில் பாரத்நகர் உள்ளது. இந்த பகுதியில் தெரு சாலை சீரமைப்பு பணிக்காக தோண்டப்பட்டது. ஆனால், மாதக்கணக்கில் நாட்கள் கடந்தும் இன்னும் சாலை சீரமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுப்பிரமணியம், பாரத்நகர்.

விபத்தை தடுக்க வேண்டும்

நாகர்கோவிலில் இருந்து குளச்சல் செல்லும் சாலையில் கணபதிபுரம் தபால் நிலையம் சந்திப்பு உள்ளது. இந்த சந்திப்பு பகுதியில் உள்ள சாலையோரத்தில் கழிவுநீர் ஓடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓடையின் மேல்பகுதியில் சிமெண்டு சிலாப்கள் அமைக்கப்படாமல் திறந்த நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வளைவில் திரும்பும்போது கழிவுநீர் ஓடைக்குள் விழுந்து விபத்தில் சிக்குகிறார்கள். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி கழிவுநீர் ஓடையின் மீது சிெமண்டு சிலாப்புகள் அமைத்து விபத்தை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அமுதா, கணபதிபுரம்.

தொற்றுநோய் பரவும் அபாயம்

பூதப்பாண்டி பேரூராட்சியில் 4-வது வார்டுக்குட்பட்ட பள்ளி தெருவில் கழிவு நீரோடை முழுவதும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் வடிந்தோட முடியாமல் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த கழிவுநீர் ஓடையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சேக் அப்துல்காதர், திட்டுவிளை.

நிழற்குடை தேவை

சுசீந்திரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் சாலையில் வழுக்கம்பாறை, ஈத்தங்காடு, பொற்றையடி ஆகிய ஊர்களின் வழியாக நான்கு வழிச்சாலை செல்கிறது. இந்த ஊர்களில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் மூலம் வந்து செல்கின்றனர். ஆனால், இந்த ஊர்களில் உள்ள பஸ் நிறுத்தங்களில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கடும் வெயிலில் நிற்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, மாணவ-மாணவிகள் நலன்கருதி நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கே.அனந்தநாராயணன், கன்னியாகுமரி.

விவசாயிகள் அவதி

இளஞ்சிறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் கீழ் ரேஷன் கடை உள்ளது. இந்த ரேஷன் கடை விவசாயிகளிள் விளைபொருட்கள் சேமிப்பு கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதனால், விவசாயிகள் தங்களது விளைபொருட்களை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ரேஷன் கடைக்காக கட்டப்பட்ட புதிய கட்டிடத்தில் மாற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பினோ, இளஞ்சிறை.

மேலும் செய்திகள்