< Back
மாநில செய்திகள்
புகார் பெட்டி
தென்காசி
மாநில செய்திகள்

புகார் பெட்டி

தினத்தந்தி
|
10 April 2023 12:15 AM IST

புகார் பெட்டி

சாலையில் செல்லும் கழிவுநீர்

தென்காசி மாவட்டம் புளியங்குடி-பாம்புகோவில் சந்தை கிழக்கு சைடு ரோட்டில் கழிவுநீர் செல்லும் ஓடை இல்லாததால், கழிவுநீர் சாலையில் தேங்குகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதோடு, சாலையும் சேதமடைகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

-மகேந்திரன், புளியங்குடி.

கழிவுநீரால் சுகாதாரக்கேடு

மேலநீலிதநல்லூர் யூனியன் சேர்ந்தமரம் 3-வது வார்டு பெரியமுக்கு தெரு பகுதியில் வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் சுகாதாரக்கேடு நிலவுவதுடன் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே சுகாதாரக்கேட்டை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-மணிகண்டன், சோ்ந்தமரம்.

குளத்தின் அருகில் கொட்டப்படும் குப்பைகள்

சங்கரன்கோவில் லட்சுமியாபுரம் 2-ம் தெரு குளத்தின் கரையில் கட்டப்பட்டுள்ள காம்பவுண்டு சுவரை ஒட்டி குப்பைகளை கொட்டுகிறார்கள். அதுமட்டுமன்றி குப்பைகளை அங்கேயே தீ வைத்து எரிப்பதினால் கடுமையான சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குப்பைகளின் சாம்பல் குளத்தில் கலப்பதினால் குளமும் மாசுபடுகிறது. நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

-சேதுகுமார், சங்கரன்கோவில்.

மழைநீர் வடிகால் சீரமைக்கப்படுமா?

கீழப்பாவூரில் இருந்து ஆலங்குளம் செல்லும் காமராஜர் சாலையின் இருபுறமும் உள்ள மழைநீர் வடிகால் கால்வாயில் அடைப்புகள் ஏற்பட்டு மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சாலையில் செல்லும் அனைத்து தரப்பினரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மழைநீர் கால்வாயை சரிசெய்ய கேட்டு கொள்கிறேன்.

-சொக்கலிங்கம், கீழப்பாவூர்.

விபத்து அபாயம்

கடையம் யூனியன் ஆழ்வார்குறிச்சி தெப்பக்குளத்தின் அருகில் நெடுஞ்சாலைத்துறை ரோட்டில் உள்ள சிறு கால்வாயின் கைப்பிடி சுவர் மிகவும் சிறியதாக இருக்கிறது. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் விபத்துகள் ஏற்படாத வண்ணம் தடுக்குமாறு கேட்டு கொள்கிறேன்.

-கிறிஸ்டோபர், கருத்தப்பிள்ளையூர்.

மேலும் செய்திகள்