< Back
மாநில செய்திகள்
புகார் பெட்டி
தென்காசி
மாநில செய்திகள்

புகார் பெட்டி

தினத்தந்தி
|
23 March 2023 12:15 AM IST

தென்காசி புகார் பெட்டி

பயணிகள் நிழற்கூடம் தேவை

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சேர்ந்தமரம் மெயின் ரோட்டில் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் கட்டப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பஸ்சுக்காக மழையிலும், வெயிலிலும் நீண்ட நேரம் காத்து நிற்கும் அவலநிலை உள்ளது. எனவே அங்கு பயணிகள் நிழற்கூடம் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

- முப்பிடாதி, பொய்கை.

குழாய் உடைப்பு சரிசெய்யப்படுமா?

வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல் அருகே மேல மருதப்பபுரம் கீழ பஸ் நிறுத்தம் அண்ணாமலை புதூர் விலக்கு அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு போதிய குடிநீர் கிடைப்பது இல்லை. எனவே குழாய் உடைப்பை சரிசெய்து சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-கணேசன், கீழக்கலங்கல்.

சேதமடைந்த வாறுகால் பாலம்

சங்கரன்கோவில் தாலுகா கண்டிகைபேரி காலனியில் சாலையின் குறுக்கே உள்ள வாறுகால் பாலத்தின் நடுவில் பெரிய துவாரம் விழுந்து உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே சேதமடைந்த வாறுகால் பாலத்தை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-ராஜன், கண்டிகைபேரி.

குறுகிய ஓடை தூர்வாரப்படுமா?

கீழப்பாவூரில் இருந்து அருணாப்பேரி செல்லும் வழியில் உள்ள நான்குமுக்கு ஓடையானது பல ஆண்டுகளாக பராமரிப்பற்று நாளடைவில் 2 அடி அகலத்தில் குறுகி விட்டது. இதனால் மழைக்காலத்தில் தண்ணீர் வடிந்து செல்வதில் இடையூறு ஏற்படுகிறது. எனவே ஓடையை அளவீடு செய்து தூர்வாருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-பாக்கியராஜ், கீழப்பாவூர்.

போக்குவரத்து நெருக்கடி

கடையம் மெயின் பஜாரில் ஆக்கிரமிப்புகள் பெருகி விட்டதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. தினமும் வாகன நெரிசலில் சிக்கி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெருக்கடியை சரிசெய்ய வேண்டும்.

-அம்ஜத், முதலியார்பட்டி

மேலும் செய்திகள்