< Back
மாநில செய்திகள்
புகார் பெட்டி
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

புகார் பெட்டி

தினத்தந்தி
|
19 March 2023 3:32 PM GMT

புகார் பெட்டி

சாலையை சீரமைக்க வேண்டும்

பேயன்குழி கிராமத்தில் கடந்த 2021-ம் ஆண்டு பெய்த மழையால் இரட்டைக் கரை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு அந்த கால்வாய் மற்றும் சாலையும் சேதமடைந்தன. பின்பு அந்த கால்வாய் சரி செய்யப்பட்டது. கால்வாய் அருகில் செல்லும் சாலை சீரமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக வாகனங்கள், பாதசாரிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி ெபாதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜொயந்த், வடக்கு நூள்ளிவிளை, பேயன்குழி.

தொற்றுநோய் அபாயம்

எறும்புக்காடு பகுதியில் அரசமரம் சாஸ்தா கோவில் உள்ளது. இந்த கோவில் தெருவில் இருந்து அனந்தநாடார்குடிக்கு செல்லும் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் ஓடை முறையாக பராமரிக்காததால் கழிவுநீர் வடிந்தோடி வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஓடையை முறையாக பராமரித்து கழிவுநீர் வடிந்தோட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுயம்புலிங்கம், எறும்புக்காடு.

மறுகால் ஓடையில் உடைப்பு

இரணியல் பேரூராட்சி ஆழ்வார்கோவில் பகுதியில் உள்ள கிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகில் விளாத்தி குளம் என்ற பில்லஞ்செரி குளம் உள்ளது. இந்த குளத்தில் இருந்து விவசாய நிலைங்களுக்கு செல்லும் மறுகால் ஓடை சேதமடைந்து காணப்படுகிறது. தண்ணீர் வீணாக பாய்கிறது. இதனால், விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கிடைக்காதால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மறுகால் ஓடையில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைத்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும்.

-நாகமணி, ஆழ்வார்கோவில்.

சேதமடைந்த சாலை

முட்டம் புனித லேனாள் குருசடி ஆலயம் அருகில் சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், அந்த சாலையேரத்தில் உள்ள கழீவுநீர் ஓடை மீது அமைக்கப்பட்டுள்ள சிமெண்டு சிலாப்புகளும் சேதடைந்துள்ளதால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைப்பதுடன், சேதமடைந்து கழிவுநீர் ஓடையின் சிலாப்புகளையும் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெகன்பிரபு, முட்டம்.

சுகாதார சீர்கேடு

கொட்டாரம் கூண்டு பாலத்தில் இருந்து பொற்றையடி செல்லும் நான்கு வழி சாலையில் தேவகுளம் உள்ளது. இந்த பகுதியில் சிலர் சாலையோரம் கோழிக்கழிவுகளை வீசிவிட்டு செல்கின்றனர். இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி கோழிக்கழிவுகளை கொட்டுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம்தாஸ், சந்தையடி.

மேலும் செய்திகள்