கன்னியாகுமரி
புகார் பெட்டி
|புகார் பெட்டி
இடையூறான மின்கம்பம்
விலவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கீழமூலச்சல் கிறிஸ்தவ ஆலயம் எதிரே மூலச்சல் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் நடுவே ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகிறார்கள். எனவே, போக்குவரத்துக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தை அகற்றி மாற்று இடத்தில் நடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஜெபாஸ்சிலின் விேனா, மூலச்சல்.
நடவடிக்கை எடுப்பார்களா?
பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட திட்டுவிளை பகுதியில் அனந்தனார் கால்வாய் பாய்கிறது. இந்த கால்வாயில் தண்ணீர் திறந்து விடும்போது நிரம்பி அருகில் உள்ள ஆப்தீன்நகருக்குள் பாய்கிறது. இதனால், அந்த பகுதியில் உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் அந்த வழியாக நடந்து செல்வதற்குள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, கால்வாயில் இருந்து தண்ணீர் குடியிருப்பு பகுதிக்குள் பாய்வதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சேக் அப்துல்காதர், திட்டுவிளை.
ஆபத்தான சாலை
இரணியலில் இருந்து மணவாளக்குறிச்சிக்கு செல்லும் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாவதுடன், அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கோ.ராஜேஷ்கோபால், மணவாளக்குறிச்சி.
சுகாதார சீர்கேடு
தர்மபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஈத்தாமொழியில் இருந்து பெரியகாடுக்கு செல்லும் சாலையோரம் கழிவுநீர் ஓடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓடையை முறையாக பராமரிக்காததால் தண்ணீர் வடிந்ேதாட வழியில்லாமல் கழிவுகள் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் ஓடையை தூர்வாரி தண்ணீர் வடிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கிருஷ்ணன், ஈத்தாமொழி
தரமான பஸ் தேவை
மார்த்தாண்டம் பணிமனையில் இருந்து கோதையார், சிலோன் காலனி, பேச்சிப்பாறை உள்ளிட்ட மலையோர பகுதிகளுக்கு அரசு பஸ்கள் முறையாக இயக்கப்படுவதில்லை. மேலும், இயக்கப்படும் பஸ்களும் பழுதடைந்து காணப்படுவதால் பயணிகள் அச்சத்துடனேயே பயணம் செய்து வருகின்றனர். மேலும், சில பஸ்கள் புறநகர் கட்டணத்தில் இயக்கப்படுவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, தரமான பஸ்களை முறையாகவும், சரியான கட்டணத்துடனும் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுஜின், கடையல்.
சரியான நேரத்தில் திறக்கப்படுமா?
குளச்சலில் கால்நடை மருந்தகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தகம் சரியான நேரத்தில் திறப்பது இல்லை. இதனால், பொதுமக்கள் தங்களது செல்ல பிராணிகளை சிகிச்சைக்காக கொண்டு வந்து பலமணிநேரம் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்நடை மருந்தகத்தை சரியான நேரத்தில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அஜ்மல், குளச்சல்.