< Back
மாநில செய்திகள்
புகார் பெட்டி
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

புகார் பெட்டி

தினத்தந்தி
|
12 March 2023 6:45 PM GMT

புகார் பெட்டி

தூர்வார வேண்டும்

அஞ்சுகிராமம் பஞ்சாயத்துக்குட்பட்ட வடக்கு பகவதிபுரத்தில் பாலசவுந்தரிகுளம் உள்ளது. இந்த குளம் முழுவதும் தாமரைச்கொடிகள், முட்செடிகள் வளர்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மறுகால் ஓடையும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தில் படர்ந்துள்ள தாமரை கொடிகளை அகற்றுவதுடன், ஆக்கிரமிப்புகளையும் மீட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நீலகண்ணன், வடக்கு பகவதிபுரம்.

சுகாதார சீர்கேடு

கொட்டாரம் பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியற்றப்படும் கழிவுநீரானது அருகில் உள்ள அகஸ்தியர் புதுகுளம் மற்றும் அண்ணாவி குளங்களில் கலக்கிறது. இதனால், இந்த குளங்களில் உள்ள தண்ணீர் மாசடைந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இந்த தண்ணீரை பயன்படுத்தும் விவசாய நிலங்களும் பாதிக்கப்படுகின்றன. எனவே, விவசாயிகள் நலன்கருதி குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்திரசேகரன், சந்தையடி.

வீணாகும் குடிநீர்

இரணியல் பேரூராட்சிக்கு உட்பட்ட பண்டாரவிளை பகுதியில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாய் சேதமடைந்து குடிநீர் வீணாக சாலையில் பாய்கிறது. இதனால், அந்த பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, குழாய் உடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மதீஷ் நாகமணி, ஆழ்வார்கோவில்.

தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?

தோட்டியோடு சந்திப்பில் இருந்து பார்வதிபுரம் செல்லும் சாலையோரமாக குளம் உள்ளது. எப்போதும் வாகன போக்குவரத்து அதிகளவில் இருக்கும் இந்த சாலையோரத்தில் உள்ள குளத்திற்கு விபத்து தடுப்புச்சுவர்கள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி குளத்தின் கரையில் விபத்து தடுப்புச்சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-ரவிகுமார், மொட்டவிளை.

விபத்து அபாயம்

தோவாளை தாலுகாவுக்கு உட்பட்ட ஆத்திபுரம் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியின் கீழ் பகுதியில் உள்ள தூண்களில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், எப்போது வேண்டுமானாலும் நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, நீர்த்தேக்க தொட்டியின் சேதமடைந்த தூண்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மணிகண்டன், ஆத்திபுரம்.

சீரமைக்கப்படுமா?

கீழ்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட தாணிவிளை பகுதியில் இருந்து கோவில்விளை, புல்லுவிளைக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாவதுடன், அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகிறார்கள். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-ராஜேஷ், கோவில்விளை.

மேலும் செய்திகள்