< Back
மாநில செய்திகள்
புகார் பெட்டி
தென்காசி
மாநில செய்திகள்

புகார் பெட்டி

தினத்தந்தி
|
13 March 2023 12:15 AM IST

புகார் பெட்டி

குப்பைகளை எரிப்பதால் மக்கள் அவதி

தென்காசி மாவட்டம் கடையம் அருகே வெய்க்காலிபட்டி புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி அருகில் ரெயில் நிலையம் செல்லும் பாதையில் சிலர் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். அங்கு குப்பைகள் அதிகளவு சேர்ந்தவுடன் தீ வைத்து எரிப்பதால் மாணவ-மாணவிகள், பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். எனவே அங்கு குப்பைத்தொட்டி வைத்து குப்பைகளை தினமும் முறையாக அகற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய கேட்டுக்கொள்கிறேன்.

-அபுபக்கர் சித்திக், வெய்க்காலிபட்டி.

ரேஷன் கடையில் நிழற்கூரை அமைக்கப்படுமா?

தென்காசி நகராட்சி 23-வது வார்டு முப்புடாதி அம்மன் கோவில் தெருவில் உள்ள ரேஷன் கடையின் முன்பு பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் காத்து கிடந்து உணவுப்பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதனால் முதியவர்கள், பெண்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே ரேஷன் கடையின் முன்பாக நிழற்கூரை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?

-முத்து கோபாலகிருஷ்ணன், தென்காசி.

குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

கடையம் சந்தை அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் சாலையும் சேதமடைகிறது. எனவே குழாய் உடைப்பை சரிசெய்து சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

-முகம்மது இப்ராகிம், முதலியார்பட்டி.

வாறுகால் அடைப்பால் சுகாதாரக்கேடு

தென்காசி 18-வது வார்டு எஸ்.கே.பி. தெருவில் வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே வாறுகாலை தூர்வாரி கழிவுநீரை முறையாக வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-பிதூர் முஸ்தபா, தென்காசி.

புதர் மண்டி கிடக்கும் சாலை

கீழக்கடையம் ரெயில் நிலையத்தில் இருந்து வடக்கு ரெயில்வே கேட் வரையிலும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் அங்கு புதர் மண்டி கிடப்பதால் விஷ பூச்சிகளின் நடமாட்டமும் உள்ளது. எனவே சாலையை சீரமைப்பதுடன் புதர் செடிகளை அகற்றி, சாலையோரம் பூங்கா அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-கண்ணன், கேளையாபிள்ளையூர்.

மேலும் செய்திகள்