தென்காசி
புகார் பெட்டி
|புகார் பெட்டி
புகாருக்கு உடனடி தீர்வு
தென்காசி மாவட்டம் கடையம் சத்திரம் பாரதி பள்ளிக்கூடம் அருகில் வேகத்தடையில் வர்ணம் பூசப்படாமல் இருப்பதாக திருக்குமரன் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரமானது. இதையடுத்து அங்கு வேகத்தடையில் வர்ணம் பூசப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
ஆபத்தான பள்ளத்துக்குள் தெருக்குழாய்
மேலநீலிதநல்லூர் யூனியன் சேர்ந்தமரம் கஸ்பா பஞ்சாயத்து நொச்சிகுளம் கிராமத்தில் தெருக்குழாயை பள்ளத்துக்குள் அமைத்து குடிநீர் பிடித்து வருகின்றனர். இதனால் இரவில் அந்த வழியாக செல்கிறவர்கள் தெருக்குழாய் பள்ளத்துக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே தெருக்குழாயை உயர்த்தி நல்லி அமைத்து குடிநீர் பிடிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-குமார், நொச்சிகுளம்.
கூடுதல் பஸ் இயக்கப்படுமா?
கடையம் அருகே கல்யாணிபுரத்தில் இருந்து ஆழ்வார்குறிச்சி செல்லும் அரசு டவுன் பஸ்சில் தினமும் காலையில் ஏராளமான மாணவ- மாணவிகள் ஆபத்தான முறையில் படிக்கட்டுகளில் தொங்கியவாறு பயணிக்கின்றனர். எனவே அந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
-முருகன், நாணல்குளம்.
தெருவின் நடுவே அடிபம்பு
ஆழ்வார்குறிச்சி பள்ளிவாசல் தெருவின் நடுவில் அடிபம்பு அமைந்துள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் நடுவே உள்ள அடிபம்பை மாற்றி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
-அம்ஜத், முதலியார்பட்டி.
குடிநீர் வசதி வேண்டும்
தென்காசி புதிய பஸ்நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. பலமாதங்களாக பழுதடைந்து காணப்படும் இந்த குடிநீர் ெதாட்டியின் பழுதினை நீக்கி பயணிகளுக்கு தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
-முருகன், மாயமான்குறிச்சி