< Back
மாநில செய்திகள்
புகார் பெட்டி
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

புகார் பெட்டி

தினத்தந்தி
|
15 Feb 2023 6:45 PM GMT

புகார் பெட்டி

குழாயில் உடைப்பு

ராஜக்கமங்கலத்திலிருந்து ஈத்தாமொழிக்கு செல்லும் சாலையில் துணை மின்நிலையம் உள்ளது. இந்த துணை மின்நிலையம் உள்ள சாலையில் பள்ளம் உள்ளது. இதில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. அதுவும் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறி செல்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை மற்றும் குடிநீர் குழாயை சரி செய்ய வேண்டும்.

- நாகராஜன், ராஜாக்கமங்கலம்.

சீரமைக்கப்படுமா?

நாகர்கோவில் பால் பண்ணை சந்திப்பை ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி சாலையுடன் இணைக்கும் பிரதான சாலை உள்ளது. பள்ளி வாகனங்கள், ஆசாரிபள்ளத்துக்கு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் என எப்போது இந்த சாலை பரபரப்பாக காணப்படும். நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில் முன்பாக செல்லும் இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டிகளும், உள்ளே இருக்கும் நோயாளிகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெகன் ஆல்பர்ட், நேசமணி நகர்.

பொது கழிப்பறை தேவை

மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதியில் யானை வரவழைத்த பிள்ளையார் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் பெருமளவில் வருகின்றனர். திருவிழா காலங்களில் பக்தர்கள் பலர் கோவிலிலேயே தங்குகின்றனர். ஆனால், அவர்களுக்கு பொது கழிப்பறை அமைக்கப்படவில்லை. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பக்தர்கள் நலன்கருதி அந்த பகுதியில் பொது கழிப்பறை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ராஜேஷ் கோபால், மணவாளக்குறிச்சி.

சுகாதார சீர்கேடு

வடசேரி பஸ் நிலையத்தில் சென்னை பஸ்கள் நிற்கும் பகுதியில் பயணிகள் அமர்வதற்காக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் அருகில் கழிவுநீர் ஓடையை தூர்வாரி கொட்டப்படுள்ளது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, பயணிகள் நலன் கருதி கழிவுகளை உடனுக்குடன் அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முகேஷ், கோட்டார்.

விபத்து அபாயம்

கன்னியாகுமரி-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் கொட்டாரம் சந்திப்பில் சாலை ஓரங்களில் பல இடங்களில் பல்வேறு பணிகளுக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. ஆனால், பணிகள் நடைபெறாமல் அப்படியே கிடக்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பணிகளை விரைந்து முடித்து பள்ளங்களை மூடி சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராமதாஸ், சந்தையடி.

வீணாகும் குடிநீர்

குலசேகரபுரத்தில் இருந்து ஈத்தங்காடு செல்லும் வழியில் சாலையில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாக சாலையில் பாய்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, குழாய் உடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அய்யப்பன், குலசேகரபுரம்.


மேலும் செய்திகள்