< Back
மாநில செய்திகள்
புகார்பெட்டி
சிவகங்கை
மாநில செய்திகள்

புகார்பெட்டி

தினத்தந்தி
|
5 Feb 2023 7:32 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சேதமடைந்த சாலை

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலிருந்து மரக்கடுர் செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து உள்ளது. இதனால் இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், காளையார்கோவில்.

குண்டும், குழியுமான சாலை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியிலிருந்து கொங்கம்பட்டி செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக இந்த சாலையில் செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

வீரபாண்டி, கொங்கம்பட்டி.

வீணாகும் மின்சாரம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் உள்ள பல தெருக்களில் பகலிலும் தெருவிளக்குகள் எரிகின்றன. இதனால் மின்சாரம் வீணாகும் நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் பகலில் தெருவிளக்குகள் எரிவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேதுராமன், திருப்பத்தூர்.

அடிக்கடி ஏற்படும் மின்தடை

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியத்தில் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத மின்தடை அடிக்கடி ஏற்படுகிறது. இதே நிலை இரவிலும் தொடர்கின்றது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அடிக்கடி ஏற்படும் மின்தடையை சரிசெய்ய வேண்டும்.

பொதுமக்கள், எஸ்.புதூர்.

சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாலைகளில் மாடுகள், ஆடுகள் போன்ற கால்நடைகள் அதிக அளவில் சுற்றி திரிகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும் அவ்வப்போது விபத்துக்களும் நடக்கின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜா, திருப்புவனம்.

Related Tags :
மேலும் செய்திகள்