< Back
மாநில செய்திகள்
புகார்பெட்டி
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

புகார்பெட்டி

தினத்தந்தி
|
6 Feb 2023 12:48 AM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குடிநீரில் கலக்கும் கழிவுநீர்

ராமநாதபுரம் மாவட்டம் மூலைக்கொத்தளம் பகுதியில் உள்ள ஹவுசிங் போர்டு காலனி வீடுகளுக்கு வினியோகிக்கப்படும் காவிரி கூட்டுக் குடிநீரில் சாக்கடை கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த தண்ணீரால் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த பகுதியில் தரமான குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம்.

தொற்று நோய் பரவும் அபாயம்

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா காட்டுப்பள்ளி தர்கா ஆர்ச் முன்பு மழைநீர் தேங்கி நிற்கின்றது. இதனால் கொசு உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் மழைநீர் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், காட்டுப்பள்ளி.

நடவடிக்கை தேவை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் 108 ஆம்புலன்ஸ் வரும் வழியில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. இதனை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், பரமக்குடி.

பொதுமக்கள் அவதி

ராமநாதபுரம் மாவட்டம் தேவேந்திரர் நகர் 2-வது தெருவில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் செல்கிறது. இதனால் இந்த சாலையில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இதற்கு அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனிதா, தேவேந்திரர் நகர்.

தெருநாய்கள் தொல்லை

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் உள்ள நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், தொண்டி.

Related Tags :
மேலும் செய்திகள்