< Back
மாநில செய்திகள்
புகார் பெட்டி
தென்காசி
மாநில செய்திகள்

புகார் பெட்டி

தினத்தந்தி
|
12 Jan 2023 12:15 AM IST

புகார் பெட்டி

புகாருக்கு உடனடி தீர்வு

தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் முதலியார்பட்டி பஞ்சாயத்து பள்ளிவாசல் தெருவில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்த நிலையில் உள்ளதாக திருக்குமரன் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரமானது. இதையடு்த்து மின்கம்பத்தின் அடிப்பகுதியைச் சுற்றிலும் கான்கிரீட் அமைத்து பலப்படுத்தப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர்

கீழ ஆம்பூர் ரெயில் நிலையம் அருகில் மெயின் ரோட்டில் இருந்து புளியங்குளம் செல்லும் சாலையில் ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இதில் தேங்கிய மழைநீர் பல நாட்களாக வடியாமல் உள்ளதால், அந்த வழியாக செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரை மோட்டார் மூலம் உறிஞ்சி அகற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-கிறிஸ்டோபர், கருத்தப்பிள்ளையூர்.

புதர்மண்டி கிடக்கும் குடிநீர் தொட்டி

சங்கரன்கோவில் யூனியன் பெரும்பத்தூர் பஞ்சாயத்து புன்னைவனப்பேரி கிராமத்தில் புதிதாக சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. பின்னர் அதனை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்காததால் பல ஆண்டுகளாக காட்சிப்பொருளாக புதர்மண்டி கிடக்கிறது. எனவே குடிநீர் தொட்டியை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

-மாரிமுத்து, புன்னைவனப்பேரி.

வாறுகால் அடைப்பு அகற்றப்படுமா?

கீழப்பாவூர் யூனியன் சிவகாமிபுரம் மேல தெருவில் வாறுகாலில் அடைப்பு உள்ளதால், சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே வாறுகால் அடைப்பை அகற்றி, கழிவுநீர் முறையாக வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

-செல்வம், சிவகாமிபுரம்.

குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

கடையம் அருகே திருமலையப்பபுரம் இசக்கி அம்மன் கோவில் அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. எனவே குழாய் உடைப்பை சரி செய்து, சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

-முகம்மது இப்ராகிம், திருமலையப்பபுரம்.

மேலும் செய்திகள்