< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
18 Dec 2022 5:54 PM GMT

புகார் பெட்டி

தேங்கிய கழிவுநீர்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி 35-வது வார்டு பகுதியில் கழிவுநீர் சாலையில் தேங்கி உள்ளது. இதனால் குடியிருப்புவாசிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் தேங்கிய கழிவுநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீரை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரதீஸ், பரமக்குடி.

சாலை சீரமைக்கப்படுமா?

ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் கிராமத்தில் பஸ் நிலையம் அருகில் சில வருடங்களுக்கு முன் தார் சாலை அமைக்கப்பட்டது. அதன் பிறகு சரியாக பராமரிப்பு இல்லாத காரணத்தால் சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மழை காலங்களில் சாலையில் நீர் தேங்கி தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

சீனிஜலாலுதீன், பெரியபட்டினம்.

அடிப்படை வசதி நிறைவேற்றப்படுமா?

ராமநாதபுரம் மாவட்டம் வாகைவயல் கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு தண்ணீர், மின்சாரம், பஸ் போன்ற அடிப்படை வசதியின்றி சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. போதிய பஸ் வசதி இல்லாததால் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டியுள்ளது. குடிநீரை மக்கள் காசு கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே இப்பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆசைமணி, வாகைவயல்.

புதிய கட்டிடம் அமைத்து தருவார்களா?

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா கொண்டுலாவி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ரேஷன் கடைக்கு என தனி கட்டிடம் இல்லாத காரணத்தால் நூலகத்தில் செயல்பட்டு வருகிறது. இதனால் பள்ளி- கல்லூரி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே ரேஷன் கடை அமைத்துதர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முருகன், கொண்டுலாவி.

சேதமடைந்த மின்கம்பம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா எஸ்.காவனூர் பகுதியில் மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் உள்ளது. இதனால் குடியிருப்பு வாசிகள் அச்சம் அடைகின்றனர். எனவே பழைய மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைத்துதர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழனி, எஸ்.காவனூர்.

மேலும் செய்திகள்