< Back
மாநில செய்திகள்
புகார்பெட்டி
சிவகங்கை
மாநில செய்திகள்

புகார்பெட்டி

தினத்தந்தி
|
14 Dec 2022 6:45 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குரங்குகள் தொல்லை

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் கிராமத்தில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த குரங்கள் பொதுமக்களை பயமுறுத்தி வருவதுடன் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவசாயிகளின் விளை பொருட்களை சேதப்படுத்தவும் செய்கிறது. எனவே குரங்குகளின் தொல்லையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

குமார், எஸ்.புதூர்.

எரியாத தெருவிளக்குகள்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா மடப்புரம் பஞ்சாயத்து வைகை வடகரை சாலையில் உள்ள தெரு விளக்குகள் எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் இந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. தெருவிளக்கை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கார்த்திகேயன், திருப்புவனம்.

நோய் பரவும் அபாயம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கே.கே,நகர் 2-வது வீதி ரோடு குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் சாலையில் மழைநீர் தேங்கி உள்ளது. தேங்கிய நீரில் இருந்து கொசுக்கள் உருவாகி தொற்று நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜசேகரன், காரைக்குடி.

சாலையில் சுற்றும் கால்நடைகள்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் நகர் பகுதி சாலைகளில் மாடுகள், நாய்கள் போன்றவை சுற்றி திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். அவ்வப்போது விபத்துக்களும் நிகழ்கிறது. எனவே, சாலையில் கால்நடைகள் சுற்றித்திரிவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வினோத், திருப்புவனம்.

நடவடிக்கை தேவை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் உள்ள அரசு பொதுப்பணித்துறை அலுவலக சுற்றுச்சுவர் சேதமடைந்தும், வளாகத்தில் செடி கொடிகள் வளர்ந்தும் காணப்படுகிறது. சுற்றுச்சுவரை சீரமைக்கவும், செடிகளை அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ஆறுமுகம், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்