< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
20 Nov 2022 3:20 PM GMT

புகார் பெட்டி

சாலையை சீரமைக்க வேண்டும்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா நாச்சியேந்தல் கிராமத்தில் தார்ச்சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் கடந்த சில மாதங்களாக ஊருக்குள் பஸ் வருவதில்லை. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என பலர் அவதியடைகின்றனர். சாலையை சீரமைத்து பஸ் வர அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.

பொதுமக்கள், நாச்சியேந்தல்.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

ராமநாதபுரம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இளங்கோவடிகள் தெருவில் பாதாள சாக்கடை அமைப்பு சரிவர செயல்படாத காரணத்தால் தெருவெங்கும் கழிவுநீர் தேங்கி காணப்படுகிறது. மேலும் தேங்கிய கழிவுநீரில் இருந்து துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடாக காட்சிஅளிக்கிறது. எனவே இந்த பகுதியில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அன்வர்தீன், ராமநாதபுரம்.

நிற்காமல் செல்லும் பஸ்கள்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் நகர் மற்றும் மண்டபம் முகாம் பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ்கள் நின்று செல்வதில்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் மிகவும் சிரமப் படுகின்றனர். எனவே இந்த பகுதியில் பஸ்கள் நின்று செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வினோத், மண்டபம்.

குழப்பம் அடையும் பொதுமக்கள்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் 21-வார்டுகள் உள்ளன. இதில் வீடு மற்றும் கடைகளுக்கு வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வரி விதிப்பிற்கும் வெவ்வேறு கதவு எண்தர வேண்டும். ஆனால் வார்டுகளில் உள்ள பல வீடுகளுக்கு ஒரே கதவு எண் தரப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட எண் பல வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் குழப்பமடைகின்றனர். எனவே இதற்கு தீர்வுகாண அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், கீழக்கரை.

நடவடிக்கை எடுப்பார்களா?

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா வாகவயல் கிராமத்தில் 2 கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாயில் சிலர் மோட்டார் மூலம் நீரை உறிஞ்சி தங்களின் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர். இதனால் கண்மாயில் தண்ணீர் இருப்பு குறைந்து வரும் அபாயம் உள்ளது. இந்த கண்மாய் நீரே இப்பகுதி மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. எனவே அதிகாரிகள் இதற்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆசைமணி, வாகவயல்.

மேலும் செய்திகள்