< Back
மாநில செய்திகள்
புகார் பெட்டி
தென்காசி
மாநில செய்திகள்

புகார் பெட்டி

தினத்தந்தி
|
16 Nov 2022 6:45 PM GMT

தென்காசி புகார் பெட்டி

வீடுகளுக்குள் புகும் மழைநீர்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா வெங்கடாம்பட்டி பஞ்சாயத்து கோவிலூற்று கிராமம் காந்தி தெருவில் உள்ள வாறுகாலில் 2 இரும்பு கம்பங்கள் உள்ளன. இதனால் வாறுகாலில் மழைநீர் சரியாக செல்லாமல் தெருவில் தேங்குவதுடன் வீடுகளுக்குள்ளும் புகுந்து விடுகிறது. எனவே மழைநீர் முறையாக வடிந்து செல்லும் வகையில், இரும்பு கம்பங்களை மாற்றி அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-தேன்மொழி, கோவிலூற்று.

கால்நடை மருத்துவமனை திறக்கப்படுமா?

மேல ஆம்பூர் பஞ்சாயத்து கருத்தபிள்ளையூரில் அரசு கால்நடை மருத்துவமனை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. ஆனால் இன்னும் அதனை திறக்காமலும், டாக்டரை நியமிக்காமலும் உள்ளனர். இதனால் பொதுமக்கள் தங்களது கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆழ்வார்குறிச்சிக்கு அழைத்து செல்கின்றனர். எனவே காட்சிப்பொருளான கால்நடை மருத்துவமனையை உடனே திறப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

-கிறிஸ்டோபர், கருத்தபிள்ளையூர்.

குண்டும் குழியுமான சாலை

கீழப்பாவூர் யூனியன் திப்பணம்பட்டி பஞ்சாயத்து நாட்டார்பட்டியில் இருந்து பூவனூர் வழியாக திரவியநகர் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை உடனே சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

-ஞானபிரகாசம், பூவனூர்.

ஒளிராத மின்விளக்குகள்

கடையம் யூனியன் முதலியார்பட்டி பஞ்சாயத்து ரஹ்மத்நகர் சாலை வளைவில் உள்ள மின்கம்பங்களில் கடந்த சில நாட்களாக மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் அப்பகுதியில் இரவில் இருள்சூழ்ந்து காணப்படுவதுடன் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்விளக்குகள் மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

-அம்ஜத், முதலியார்பட்டி.

தெருவில் தேங்கும் மழைநீர்

கீழப்பாவூர் யூனியன் பூலாங்குளம் பஞ்சாயத்து அலுவலகம் பின்புறம் உள்ள தெருவில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு சாலை, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-தங்கசாமி, பூலாங்குளம்.

மேலும் செய்திகள்