< Back
மாநில செய்திகள்
புகார் பெட்டி
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

புகார் பெட்டி

தினத்தந்தி
|
13 Nov 2022 6:45 PM GMT

புகார் பெட்டி

மின்விளக்கு மாற்றப்பட்டது

வேதநகரில் இருந்து கன்னங்குளம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் ஒரு மின்கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள தெரு விளக்கு பழுதடைந்து எரியாமல் கிடந்தது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிப்பட்டு வந்தனர். இதுபற்றி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதைதொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த விளக்கை அகற்றி விட்டு புதிய விளக்கை பொருத்தி எரியவைத்தனர்.

-ஆன்றோ டெகோசிங் ராஜன், வேதநகர்.

நடவடிக்கை தேவை

ரீத்தாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட தட்டாரவிளை சவேரியார் சிற்றாலயம் அருகில் உள்ள மின்கம்பத்தில் விளக்கு பழுதடைந்து பல நாட்களாக எரியாமல் உள்ளது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பழுதடைந்த விளக்கை அகற்றி விட்டு புதிய மின் விளக்கை பொருத்தி எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-அ.மரிய ராஜரெத்தினம், தட்டாரவிளை.

மரத்தை அகற்ற வேண்டும்

கீழ்குளம் பேரூராட்சிக்குட்பட்ட இனயம் பகுதியில் ஓடக்கரையில் இருந்து ரேசன்கடை செல்லும் கான்கிரீட் சாலை உள்ளது. இந்த சாலையின் வலது புறத்தில் மரம் ஒன்று வாகனகள் செல்வதற்கு இடையூறாக நிற்கிறது. இதனால் ரேசன்கடைக்கு பொருட்கள் கொண்டு வரும் லாரிகள், பள்ளி வாகனங்கள் பெரும் சிரமத்துகுள்ளாகி வருகின்றன. எனவே, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரத்தை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அப்துல் ரசாக், இனயம்.

சாலையை சீரமைக்க வேண்டும்

பறக்கை மெயின் ரோட்டில் இருந்து பறக்கை ஊருக்கு செல்லும் எம்.எஸ். சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையில் அரசு பள்ளி உள்ளது. சாலையில் தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆ.சரவணன், பறக்கை.

விபத்து அபாயம்

ஆசாரிபள்ளத்தில் இருந்து மேலப்பெருவிளைக்கு செல்வதற்கு குறுக்குத்தெரு உள்ளது. இந்த தெருவில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மரை தாக்கி நிற்கும் கம்பங்கள் சேதமடைந்து காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் கம்பங்கள் சரிந்து விழுந்து அந்த வழியாக செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த கம்பங்களை அகற்றி விட்டு புதிய கம்பங்களை நடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆ.ஆன்றணி சதீஷ், கீழ ஆசாரிபள்ளம்.

மின்கம்பம் மாற்றப்படுமா?

சாமிதோப்பு கரும்பாட்டூர் ெரயில்வே கேட் அருகில் வயல்வெளியில் அந்த வழியாக உயர் அழுத்த மின்கம்பிகள் கொண்டு செல்ல இரண்டு கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மின்கம்பங்களின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் விவசாயிகள், பொதுமக்கள் பெரும் அச்சத்துடனேயே அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே, சேதமடைந்த கம்பங்களை அகற்றி விட்டு புதிய மின்கம்பங்களை நடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.முத்துக்குமார், சாமிதோப்பு.

எரியாத மின்விளக்கு

பார்வதிபுரம் மேம்பாலத்தில் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குகடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்குடையில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள் நீண்ட நாட்களாக பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால், இரவு நேரங்களில் பெண்கள் அச்சத்துடனேயே பஸ்சுக்காக காத்து நிற்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, பெண்கள் நலன் கருதி பழுதடைந்த விளக்குகளை அகற்றி விட்டு புதிய மின் விளக்குகளை பொருத்தி எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஆர்.எஸ்.ராஜன், பீச்ரோடு, நாகர்கோவில்.

சேதமடைந்த சாலை

பொழிக்கரை கிராமத்தில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழை நேரங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஏரோ, பொழிக்கரை.

எரியாத மின்விளக்கு

கணபதிபுரம் பேரூராட்சிக்குக்கு உட்பட்ட ஆயிரங்கால் பொழிமுகம் கடற்கரை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பத்தில் விளக்கு பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால், இரவு அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சுற்றுலா பயணிகள் நலன் கருதி பழுதடைந்த விளக்கை அகற்றி விட்டு புதிய மின்விளக்கை பொருத்தி எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-லிங்கம், கணபதிபுரம்.

மேலும் செய்திகள்