< Back
மாநில செய்திகள்
புகார் பெட்டி
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

புகார் பெட்டி

தினத்தந்தி
|
9 Nov 2022 6:45 PM GMT

புகார் பெட்டி

சாலை சீரமைக்கப்படுமா?

தென்தாமரைகுளம் பேரூராட்சிக்குட்பட்ட பூவியூரில் இருந்து முகிலன்குடியிருப்புக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை சுற்றுவட்டார மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் அரசு பள்ளியும் உள்ளதால் மாணவ-மாணவிகள் இந்த சாலை வழியாக சென்று வருகின்றனர். ஆனால், சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழை நேரங்களில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பெ.முருகன், பூவியூர்.

மின்கம்பத்தை மாற்ற வேண்டும்

அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்குட்பட்ட 18-வது வார்டு பகுதியில் வடக்கு சாலை உள்ளது. இந்த சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் அந்த வழியாக செல்வோர் மீது சரிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை நடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

-ராபர்ட் மாணிக்கராஜ், அகஸ்தீஸ்வரம்.

சேதமடைந்த சிலாப்புகள்

திங்கள்நகரில் இருந்து நாகர்கோவில் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் திங்கள்நகர் முதல் பரசேரி வரை உள்ள பகுதியில் குடிநீர் வடிகால் வாரியத்தால் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்டு காங்கிரீட் சிலாப்புகளால் மூடப்பட்டது. தற்போது, மடவிளாகம், பேயன்குழி ஆகிய பகுதிகளில் சிலாப்புகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, சேதமடைந்த சிமெண்டு சிலாப்புகளை அகற்றி விட்டு புதிய சிலாப்புகளை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரவிக்குமார், மொட்டவிளை.

பாதியில் நின்ற சாலை பணி

பைங்குளம் ஊராட்சியில் வேட்டமங்கலத்தில் இருந்து கொச்சத்திமூலை பகுதிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது, பணிகள் பாதியில் கைவிடப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், அப்பகுதி பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை பராமரிப்பு பணியை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வமணி, வேட்டமங்கலம்.

வடிகால் ஓடை தேவை

மயிலாடி பேரூராட்சிக்கு உட்பட்ட மிஷின்விளையில் மாசிலாமணி தெரு உள்ளது. இந்த தெருவில் மழைநீர் வடிகால் ஓடை அமைக்கப்படாமல் உள்ளது. மழை நேரங்களில் தண்ணீர் வடிந்தோட வழியில்லாமல் அங்கேயே தேங்கி அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அந்த பகுதியில் மழைநீர் வடிகால் ஓடை அமைத்து தண்ணீர் வடிந்தோட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.

-விக்டோரியா, மாசிலாமணி தெரு, மயிலாடி.

விபத்து அபாயம்

நாகர்கோவில் வடசேரியில் இருந்து பூதப்பாண்டிக்கு செல்லும் பாலமோர்சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழை நேரங்களில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். இதனால், பள்ளி மாணவ-மாணவிகள், நோயாளிகளை ஏற்றி வரும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றன. எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ், நாராயணசாமி, பூதப்பாண்டி.

மேலும் செய்திகள்