< Back
மாநில செய்திகள்
புகார் பெட்டி
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

புகார் பெட்டி

தினத்தந்தி
|
2 Nov 2022 6:45 PM GMT

புகார் பெட்டி

பள்ளத்தை சரி செய்ய வேண்டும்

கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கரியமாணிக்கபுரம் உள்ளது. இந்த பகுதியில் சாலையில் ஒரு பள்ளம் ஏற்பட்டுள்ளது. விபத்தை தடுப்பதற்காக போலீசார் தடுப்பு வேலியை வைத்துள்ளனர். ஆனால், நாட்கள்பல ஆகியும் பள்ளம் சரி செய்யப்படாமல் காணப்படுகிறது. இதனால், அந்த சாலையில் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பள்ளத்தை சீரமைத்து சாலையில் போக்குவரத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம்தாஸ், சந்தையடி.

எரியாத மின்விளக்கு

வேதநகரில் இருந்து கன்னங்குளம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பத்தில் விளக்கு பழுதடைந்து பல நாட்களாக எரியாமல் காணப்படுகிறது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பாதசாரிகள் நலன் கருதி பழுதடைந்த விளக்கை அகற்றி விட்டு புதிய விளக்கை பொருத்தி எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆன்றோ டெகோசிங்ராஜன், வேதநகர்.

விபத்து அபாயம்

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வேப்பமூடு பகுதியில் பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே உள்ள வங்கியின் முன்பு வடிகால் ஓடையின் மீது நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியின் முன்பு ஓடையின் மீது அமைக்கப்பட்டுள்ள சிமெண்டு சிலாப்பு சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த சிமெண்டு சிலாப்பை அகற்றி விட்டு புதிய சிலாப்பை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஆர்.வி.நாராயணன், வைத்தியநாதபுரம்.

பழுதடைந்த எந்திரம்

மார்த்தாண்டம் பகுதியில் அரசு மண்எண்ணெய் விற்பனை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் மண்எண்ணெய் எந்திரம் மூலம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த எந்திரம் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பழுதடைந்த எந்திரத்தை அகற்றி விட்டு புதிய எந்திரத்தை அமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தே.ஜாண் ஜெயசிங், காஞ்சிரகோடு.

சேதமடைந்த சாலை

ஈத்தாமொழியில் இருந்து ராஜாக்கமங்கலம் வழியாக செல்லும் மேற்கு கடற்கரை சாலை உள்ளது. இந்த சாலையில் பண்ணையூர் பாலத்திற்கும் ராஜாக்கமங்கலம் துறைக்கும் இடைப்பட்ட இடத்தில் சாலையின் நடுவே கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக பதிக்கப்பட்ட குழாயில் உடைப்பது ஏற்பட்டு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக வேகமாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த பகுதியில் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆ.நாகராஜன், ராஜாக்கமங்கலம்.

சாலை சீரமைக்கப்படுமா?

திங்கள்நகரில் இருந்து அழகியமண்டபம் செல்லும் சாலையில் இருந்து மைலோடு மீன்கடை, வாளோடு, கொல்லாய், திக்கணங்கோடு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை மிகவும் சேதமடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன் அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பார்களா?.

-ஆ.மகேஸ்வரன், மைலோடு.

மேலும் செய்திகள்